Saturday, November 18, 2006

மனிதன் மலம் சுமக்க யார் காரணம்?.

நான் வேகத்தின் காதலன்.எப்போது எந்த வண்டியை தொட்டாலும் அதன் முழு வேகத்தை முயற்சி செய்து பார்ப்பதை ஒரு சாகசமாக நினைப்பவன்.ஆனால் வண்டி ஓட்டும்பொழுது ஒரு சிறிது கூட கவனம் பிசகாமல் இருக்க முயற்சிப்பேன்.140 கிலோமீட்டர் வேகத்தில் ஒரு சிறு தவறு கூட பெரும் விபத்தில் முடிய வாய்ப்பு உள்ளதால், எப்பொழுதும் ஒரு ரெட் அலர்ட் கண்டிஷனில்தான் ஸ்டியரிங் பிடித்திருப்பேன்.அதனால் சாலையில் ஒரு சிறு இடையூறு கூட எனக்கு எரிச்சலை கொடுக்கும்.ஒரே ஒரு விஷயத்தை தவிர,அது உடைப்பெடுத்து ஓடும் சாக்கடையையோ அல்லது மலக்கால்வாயையோ சுத்தப் படுத்திக் கொண்டிருக்கும் தொழிலாளர்களை கண்டால்.

இன்று அருணா சாய்ராமின் குரலில்,சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியாரின் குறை ஒன்றும் இல்லை உச்ச ஸ்தாதியில் ஒலிக்க,
உச்ச வேகத்தில் செல்லும் பொழுது, திடீரென்று அனைத்து வாகனங்களும் வேகம் குறைய ஆரம்பித்தன.சாலையில் சில தொழிலாளர்கள், அடைபட்டு, பொங்கி ஓடிய மலக்கால்வாயை சரிப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.

குறையொன்றும் இல்லையை ரசிக்க முடியவில்லை.ஏன் இந்த நிலைமை என்று யோசித்தேன்.ப்ளாக்கர் பகுத்தறிவு கவுண்டனாகவோ, களத்துமேட்டு காட்டானாகவோ இருந்திருந்தால் வெகு சுலபமாக மனுவின் மீது பழியைப் போட்டு விடலாம். ஆனால் நிஜமான அக்கறையோடு யோசித்தபோது ஒரு மின்னல் வெட்டியது.

இதற்கு காரணம் நகரமயமாக்கல்தான். கூடவே இதற்கு ஏற்ற வடிவில்
நகரங்களை வடிவமைக்காததும் / பழைய நகரங்களை மாற்றி அமைக்காததும்.
எனது சொந்த ஊரான நெய்வேலி நகரத்தில் இந்த பிரச்சனை கிடையாது.இங்கு மலக்கால்வாய் ஊரின் எல்லையில் உள்ள ஒரு பெரிய கினற்றில் சென்று முடியும். அங்கு ஒரு பெரிய மத்தால் கடையப்பட்டு, அந்த நீர் புல் வெளியில் பாய்ச்சப்படும்.அதில் விளையும் புல்லை( மிகச் செழுமையாக இருக்கும் ) வீதிகளில் கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.

மனிதன் இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த காலங்களில் இந்த பிரச்சனை இல்லை.ஆத்தங்கரை, குளத்தங்கரை, வாய்க்கால்,வரப்பு என இதற்காக சுற்றிய நாட்களெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது.

இந்த பிரச்சனையை நம்மூர் ஆட்சியாளர்கள் நினைத்தால் மிகச் சுலபமாக தீர்க்கலாம்.அவர்களை செயல்பட விடாமல் தடுப்பது எது என்றுதான் தெரியவில்லை.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

2 comments:

Anonymous said...

அப்ப மனு காரணம் இல்லையா?. முழு பூசனிக்காய சோத்துல மறைக்கறது என்னான்னு தெரிஞ்சுப் போச்சு.

Anonymous said...

காட்டானும் கவுண்டனும் இவர்களைத்தவிர அம்பேரிக்காவில் உட்கார்ந்து தமிளூ என்று பேசும் நாதறி(களும்) மலம் அள்ளச் சொன்னால் உடனே அள்ளுவார்கள் தெரியுமா? அதனால் தான் பார்ப்பனர்கள் மீது குறை கூறிக் கொண்டிருக்கிறார்கள். அட, நீங்க வேற, மேற்படி பார்ட்டிகளெல்லாம் தாங்கள் திருமணம் செய்து கொண்டதே தங்கள் சமூகத்தை சேர்ந்த பெண்களை தான். அவர்கள் அடித்த பத்திரிகையில் அவர்களது தாத்தா, அப்பாவின் பெயருக்கு பின்னால் அவர்களின் ஜாதியும் சிரித்தது. ஊருக்கு தான் உபதேசம்.