Thursday, November 30, 2006

நான் ஜாதி வெறியனா!!!

நான் மிக மதிக்கும் நபர் ஒருவரை இரு நாட்களுக்கு முன் சந்தித்தபொழுது, எனது எழுத்துக்களில் சாதி வெறி மேலோங்கி இருப்பதாக இனைய நண்பர்கள் பேசுவதாக குறிப்பிட்டார். நான் அப்படியெல்லாம் வெறி பிடித்தவன் இல்லை என்று உடனடியாக அவருக்கு மறுப்பு தெரிவித்திருந்தாலும், ஏனோ மனதிற்குள் ஒரு உறுத்தல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆகவே சில விளக்கங்களை அளிப்பது என்று முடிவெடுத்தேன்.

நான் இனையத்தில் ஜாதி பேசியிருந்தால் அது ஒரு எதிர் வினையாக மட்டுமே இருந்திருக்குமே அன்றி மேல்ஜாதி மனோபாவ சிந்தனை வெளிப்பாடாக நிச்சயம் இருந்திருக்காது. ஒரு புழுவைக் கூட குச்சியால் குத்தினால் சிறிது எதிர்ப்பைக் காட்டும். இதை தவறென்று யாராலும் மறுக்க முடியுமா?. அதே போன்றதொரு அறச்சீற்றம்தான் எனது எதிர்வினை.

என்னுடைய பார்வையில் வெறியர்கள் என்றால் அது இறைமறுப்பாளர்கள்தான். இவர்கள் தூவிய விஷ வித்துக்களால் கிளர்ந்தெழுந்த பார்ப்பனீய எதிர்ப்பு என்னும் பார்த்தீனிய கருத்தால் நேரடியாக பல முறை பாதிக்கப்பட்டவன் நான். எனவே எனது எதிர்வினை சற்றே வலுவானதாக இருந்திருக்கலாம்.

நான் மரணத்தில் இருந்து வாழ்க்கையை பார்ப்பவன். இன்னிக்கி செத்தா நாளைக்கு பாலு, அந்த பாலும் நமக்கானது இல்லை. என்னைக் கேட்டால் மனிதன் கடவுளை பற்றி சிந்திப்பதை விட மரணத்தைப் பற்றி சிந்தித்தால் சீக்கிரமே பதப்படுவான்.

எனது லட்சியம் தேடல்தான். சிறிது காலம் நாத்திகனாகவும் வாழ்ந்திருக்கிறேன். எனது அனுபவத்தில் நாத்திகவாதம் மிக சுலபமானதும் முட்டாள்தனமானதும் என்று புரிந்து கொண்டேன். அது வெறும் வறட்டுக் கேள்விகளால் நிரம்பிய உலகம். எந்த அனுபவப் புரிதலையும் தராதது. அதனால் நிச்சயம் மனிதனின் மனதில் அன்பு வளர்க்க முடியாது. நாத்திகத்தால் வெறுப்பைத்தான் வளர்க்க முடியும். அதைத்தான் நாம் இன்று தமிழகத்தில் கண்கூடாக கண்டு வருகிறோம்.

பிராமனீயம் என்ற சீரிய ஓடு தளத்தில் இருந்து கிளம்பியதால் முரளீதரன் என்ற விமானத்தின் பயனம் உலகப் பெருவெளியில் அர்த்தமுள்ளதாகவே உள்ளது. ஆனால் நான் ஞானி ஒன்றும் இல்லையே அப்படியே கீழிறங்காமல் உயரவே பறந்துகொண்டு இருப்பதற்கு. நான் சம்சாரி ஐயா, கீழிறங்கித்தானே ஆகவேண்டும்.

அப்படி இறங்க நினைக்கையில், இறங்கு தளத்தில் சில நாடோடிகள் ஆபாசக் குப்பைகளை கொட்டி வைத்திருப்பதையும் ( கார்த்திகை மாசத்து நாய் போல் இவனுக்கு எப்போதும் துருத்திக்கொண்டே இருக்கும் போல), சில கருப்பு பூனைகள் குறுக்கே ஓடுவதையும், சில காட்டான்கள் ஒடு தளத்தை களத்து மேடாக மாற்றி வைத்திருப்பதையும் பார்க்கும் பொழுது, எதிர்வினை புரியாமல் இருக்க முடியவில்லை.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

2 comments:

BadNewsIndia said...

இறை மறுப்பும் பெரிய குற்றமில்லை. அவர்கள் வழி தனி வழி.

நீங்க சொல்ற மாதிரி, சில 'வெறியர்கள்' மிகக் கேவலமாக எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அவர்களை எதிர் கொள்ளும்போது, அதே சூட்டோடு அவர்களுக்கு பதிலாமல், பதத்துடன் அணுகுவதே சரியான வழி.

அவங்களுக்கும் உங்களுக்கும் வித்யாசம் இருக்குல்ல. அது மறக்கக் கூடாது.

murali said...

"நீங்க சொல்ற மாதிரி, சில 'வெறியர்கள்' மிகக் கேவலமாக எழுதிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அவர்களை எதிர் கொள்ளும்போது, அதே சூட்டோடு அவர்களுக்கு பதிலாமல், பதத்துடன் அணுகுவதே சரியான வழி."

"முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்".

"வைரத்தை வைரத்தால்தான் அறுக்க வேண்டும்".

"சத்தத்தை சத்தத்தால்தான் அடக்க வேண்டும்"

போன்ற பெரியோர் வாக்கு பொய்யா?.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.