திரு சுந்தர வடிவேல் அவர்களின் சாவிலும் பிழைக்கும் பார்ப்பன கூட்டம் பதிவிற்கு இட்ட பின்னூட்டம்.
ஐயா, உங்கள் தந்தையாரின் மறைவிற்கு எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
1. அறுபது வயது முதியவர்தானே என இதை நீங்கள் மிகச் சாதாரனமாக எடுத்துக் கொண்டிருக்கலாம்.நான் அப்படித்தான் எடுத்துக் கொண்டிருப்பேன்(ஜாதி ஆராய்ச்சியெல்லாம் செய்திருக்க மாட்டேன்).
2. உங்கள் மனதில் ஊட்டி வளர்க்கப் பட்டிருக்கும் பிராமண எதிர்ப்புதான் உங்களை கோபப்பட வைத்திருக்கிறது.
3. பிராமணர்கள் என்றில்லை, தமிழகத்தில் எந்த சாதியைச் சேர்ந்த வயதானர்வர்களாயிருந்தாலும், வயதில் சிறியவரை வா, போ என்று ஒருமையில் அழைப்பதுதான் நமது கலாச்சாரம்/பழக்கம்.
4. இந்த விஷயத்தில், உங்கள் சித்தப்பா என்ன உணர்ந்தார் என அறிய ஆசைப்படுகிறேன்.
5. நான் பழகியவரையில், பிராமண குடும்பங்களில், எங்களுக்குள்ளாகவே நாங்கள் ஒருமையில்தான் பேசிக் கொள்வோம். உதாரணத்திற்கு அண்ணா, அக்கா யாராயிருந்தாலும் வாடா, போடாதான். அப்பா, அம்மா எல்லாம் நீ,போ,வா தான். இதில் ஜாதி வித்தியாசம் பார்க்கிறார்கள் என்பதெல்லாம் கிடையாது.
6. இப்படி அழைப்பது ஒரு அன்பினாலும், அந்நியோன்யத்தினாலும்தான், அவமரியாதக்காக அல்ல.
7. என்னுடய அனுபவத்தில், கோவை மாவட்டத்தை தவிர்த்து, தமிழகத்தின் ஏனைய இடங்களில் பேசு மொழியில் மரியாதை என்பதே கிடையாது ( எல்லாம் ஒருமைதான்).
8. கோவையில் நான் இருந்தபோது நடந்த சம்பவம்.நான் குடியிருந்த வீட்டின் ஓனர் ஒரு கவுண்டர். ஒரு நாள் தெருவில் குழி வெட்டும் வேலைமுடித்த சில உழைப்பாளிகள் குடிக்க தண்ணீர் கேட்டார்கள்.நான் தண்ணீர்கொடுத்தேன். நான் வீட்டினுள் சென்ற பின் என்னை பின் தொடர்ந்து வந்த எனது வீட்டு ஓனர். என்னப்பா சக்கிலிப் பசங்களுக்கு கையில/சொம்புல தண்ணீ கொடுக்கிற அதுவும் இல்லாம சொம்ப கழுவாம வேற கொண்டுப்போற என்று என்னைக் கடிந்து கொண்டார். நான் அதிர்ந்து போனேன். நம்புங்கள் அது நாள் வரை எனக்கு தீண்டாமை என்றால் என்னவென்றே தெரியாது.
9. இதே மனிதர் அவர்கள் வீட்டு மூன்று வயது குழந்தையை நான் வாடீ போடீ என்று அழைப்பதாக ஒரு கட்டத்தில் வருத்தப் பட்டார். அவர்கள் எல்லாம் ஏங் கண்ணு என்றுதான் அழப்பார்கள். நானும் அதுபோல் அந்த குழந்தையை மரியாதையாக அழைக்க வேண்டும் என்று கேட்டுக்(கட்டாயம்) கொள்ளப்பட்டேன்.எனக்கு இது மிகவும் செயற்கையாக/விநோதமாக இருந்தது. நானும் they need respect?. என்று கோபப்பட்டு சிறிது காலம் அந்த குழந்தையிடம் பேசாமலே இருந்தேன். குழந்தைதானே அதற்கு இந்த வார்த்தை ஜாலமெல்லாம் புரியவில்லை. அது என்னை(அன்பை) சரியாகவே புரிந்து கொண்டிருந்தது.அதனால் குழந்தையிடம் ஏன் கோபம் என்று சீக்கிரம் இளகி விட்டேன். ஆனால் கடைசிவரை வாடி போடி தான்.
10. மருத்துவர் இராமன் அடிமை கூட பத்திரைக்கையாளர்களிடம் நீ,வா,போ என்றுதான் பேசுவார்.
11. 1994/1995ஆம் வருடம், நான் சென்னை,திருவல்லிக்கேனியில் வசித்த வருடம், ஒரு நாள் மெரீனா பீச்சில் குளித்துக் கொண்டிருக்கும்போது கரைக்கு இழுக்கப்பட்ட கட்டுமரத்துக்கு அருகே சிறிது சென்றதால்,வீரமணியால்(தாதா)ஓ..ஒதுங்குடா என்று திட்டப்பட்டேன், சிறிது முறைத்ததும் தே...என்று திட்டப் பட்டேன். அவர்களது இயல்பான பேச்சு மொழியே அதுதான்.அதுவில்லாமல் வலியவனை எட்டி உதைக்க முடியுமா என்ன?.
12. நீ, வா, போ என்று அழைத்தது ஒரு பிராமணன் என்ற ஒரே காரணத்திற்காக நீங்கள் பேனை பெருமாள் ஆக்கி விட்டீர்கள் என்றுதான் நினைக்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
பா,முரளி தரன்.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
Well said. You have boldly and very clearly expressed your views, You are 100% right about your observation on the general TN public\'s attitude. These guys are perverted elements and they are molded in hardcore anti bramin mindset. These guys dont have any self confidence and self respect, they try to claim their self confidence by attacking a weaker section of the society only. Sundaravadivel is one of the hard core bramin hater, he is doing some research in Yale university. All offended readers can complain to his university director. He has committed a racial crime. This perverted animal did a great damage to his father\'s soul which has to bear the sins committed by this hatemongering son.
நான் பழகியவரையில், பிராமண குடும்பங்களில், எங்களுக்குள்ளாகவே நாங்கள் ஒருமையில்தான் பேசிக் கொள்வோம். உதாரணத்திற்கு அண்ணா, அக்கா யாராயிருந்தாலும் வாடா, போடாதான். அப்பா, அம்மா எல்லாம் நீ,போ,வா தான். இதில் ஜாதி வித்தியாசம் பார்க்கிறார்கள் என்பதெல்லாம் கிடையாது.
I fully agree on this. I have some couple of Brahmin friends in both sexes and I have seen this in real.
நான் ஏற்கனவே கூறியதை இங்கு மறுபடியும் கூறுகிறேன். சுந்தரவடிவேலுவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள், அவரது தந்தையாரின் மறைவுக்காக.
பலர் கூறுவது போல அந்த பார்ப்பனர் கூலிக்காரன் அல்ல. சுந்தரவடிவேல் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்த நேரத்தில் அந்த பார்ப்பனர் குரு ஸ்தானத்தில் இருப்பவர். அவரை இப்படி திட்டி பதிவு போடுவதால் குருத்துரோகம் செய்தவாகிறார் சுந்தரவடிவேல், அவர் இதை ஏற்றுக் கொண்டாலும் சரி, கொள்ளாவிட்டாலும் சரி.
சடங்கில் நம்பிக்கையில்லையென்றால் அதை செய்யாமல் இருப்பதே உத்தமம், ஸ்ரத்தையாக செய்ய வேண்டியிருப்பதாலேயே நாம் ஸ்ரார்த்தம் என அழைக்கிறோம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஆஹா ஆனந்தம்,
டோண்டு சாரின் பின்னூட்டம் கண்டு.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இரண்டு நாள் முன்னர்தான், நானும் ஆஸாத் சாரும் தங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளிதரன்.
Post a Comment