விடாது கருப்பின் பதிவில் இப்போதுதான் மருதூர் இராமலிங்கம் பிள்ளை பற்றிய கருப்பின் பினாத்தல்களையும், அவரது அடிவருடி அரைகுறைகளின் பின்னூட்டங்களையும் படித்தேன். நினைவு தெரிந்த நாள் முதல் "அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை" என்று சொல்லி வாழ்ந்துவரும் நான், சிலரின் தெளிவிற்காக இந்தப் பதிவை எழுதுவது அவசியமாகிறது.
நான் பிறந்து வளர்ந்தது நெய்வேலியாய் இருந்தாலும், முதல் வகுப்பு படித்தது வடலூர் முருகானந்தா ஆஸ்ரம பள்ளியில்தான். எனது தாய் வழிப்பாட்டன், மாமன்மார்கள், சித்தப்பா அனைவரும் வடலூரில்தான் வசித்து வருகிறார்கள். நான் நடை பழகிய நாள் முதல் வடலூர் சத்திய ஞான சபை
செல்லும் பழக்கமுடையவன்.
எனது குடும்பத்தார் அனைவரும் கூட்டாக அருட்பா படிக்கும் பழக்கம் உள்ளவர்கள். எனது குடும்பத்தில் ஜோதி என்ற பெயருடைய பல குழந்தைகள் உண்டு. அந்த அளவு வள்ளல் மீதும், அருட்பா மீதும் பற்றுள்ள குடும்பம் எங்களுடையது.
எனது மகனுக்கு, வள்ளல் கையால் ஏற்றப்பட்டு 140 வருடங்களுக்கும் மேலாக அணையாமல் பாதுகாக்கப்படும் அடுப்பில் சமைத்த உணவினைத்தான், முதல் சமைத்த உணவாக கொடுத்தோம்.
மானிடரின் வயிற்றில் பசி என்னும் அணையா நெருப்பு உள்ளவரை, இந்த அடுப்பு அணையாமல் எரிந்து, பசித்த வயிற்றிர்கு உணவிட வேண்டும் என்பது வள்ளலாரின் கட்டளை. இங்கு தானியங்கள் சேகரிக்க பெரிய பெரிய பத்தாயங்கள் இருக்கும். சுற்றுப் பகுதிவாழ் மக்கள் மூட்டை மூட்டையாக இங்கு கொண்டு வந்து தானியங்கள் கொடுப்பார்கள்.எங்கள் குடும்பத்தில் எந்த விஷேஷமாய் இருந்தாலும், இங்கு தானியம் கொடுப்பதை நாங்கள் ஒரு பழக்கமாக வைத்திருக்கிறோம்.
தைப்பூச திருநாள் எங்களுக்கு மிக முக்கியமான நாள். குடும்பத்தார் அனைவரும் பூசத்திற்கு முன்பே வடலூரில் கூடி விடுவோம். சிறு வயதில் ஒரே கொண்டாட்டமாக இருந்த பூசம், பெரியவன் ஆனதும் உள் முகப் பயனத்திற்கான உந்துதலாய் இருந்தது.
பூசம் அன்று ஆறு திரைகளை விலக்கி ஏழாவதாக உள்ள ஜோதி தரிசனம் காட்டுவார்கள். ஆறு திரைகள், ஆறு ஆதார நிலைகளையும் ஏழாவதான ஜோதி தரிசனம், ஜோதிவடிவான இறை தரிசனம்( சகஸ்ராரம்) என்றும் சொல்வார்கள்( மறைபொருள்).
எனது சித்தப்பா குடும்பம் ஒரு சத்திரத்திற்கு பொறுப்பாளிகள்.அதனால் பூசத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே சில ஆயத்த வேலைகளை
சன்மார்கிகளுக்காக செய்ய ஆரம்பித்து விடுவார்கள். சன்மார்கிகள் வந்து தங்கி செல்ல, உறங்க,உணவருந்த தேவையான ஏற்பாடுகள். இதை அவர்கள் சில தலைமுறைகளாக ஒரு தொண்டாகத்தான் செய்து வருகிறார்கள் ( பிழைப்பு அல்ல).
தைப்பூசம் அன்று, வடலூர் பிராமண சங்கத்தின் சார்பாக தண்ணீர்ப் பந்தல் அமைத்து பக்தர்களுக்கு மோர், பானகம், சித்ராண்ணம் அளிப்பதையும்
வழக்கமாக செய்து வருகிறோம்.
இப்போது கருப்பின் புரட்டுகளைப் பார்ப்போம்.
"சிதம்பரத்தை அபகரித்து தமிழை தள்ளிவைத்துபோல் வடலூரிலும் தங்கள் கைங்கர்யத்தைக் காட்ட பேராசைப்படுவது தெரிகிறது.வள்ளலாரும், தன் முப்பாட்டனாரும் நண்பர்கள் என்றும், சத்தியஞான சபையில் வழிபாடு நடத்த தங்கள் குலத்திற்கே உரிமை உள்ளதாக வள்ளலார் எழுதிக் கொடுத்ததாகவும் போலியாக ஆவனங்களை தயார் செய்து தனது அட்டூழியங்களை செய்துவருகின்றார் சபாநாதஒளி என்ற இந்த பார்ப்பனன்."
நாங்கள் எல்லாம் ஒளி மாமா என்று அன்போடு அழைக்கும் இந்த சத்தியசீலருக்கு, பல காலமாகவே நாத்திகர்களாலும், பிராமண
துவேஷிகளாலும் பிரச்சனைதான். பல வருடங்கள் முன்னதாகவே
சிலபேர் அவரை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்றார்கள்.
அவர் சுப்ரீம் கோர்ட்வரை சென்று வள்ளலாரின் கையெழுத்தாலான அந்த ஆவனங்களை நிரூபித்துள்ளார். வள்ளலார் சத்திய ஞான சபை கட்டிடத்தை வடிவமைத்து ( தாமரை வடிவிலான இந்த கட்டிடம் வள்ளலாரின் சொந்த வடிவமைப்பு) கட்டி முடித்த பின், அதன் பராமரிப்பையும், வழிபாட்டு முறைகளையும், சொத்துக்களையும் நிர்வகிக்கும் பொறுப்பையும், இந்த ஒளி மாமா குடும்பத்திற்கும் அவரது தலைமுறைக்கும் ஒப்படைத்து விட்டார். இது வள்ளலார் ஜோதியில் கலக்கும்(மேட்டுக்குப்பம்) முன்னரே நடைமுறைப் படுத்தப்பட்டது.
அதனால் சில பூனைகள் கண் மூடிக்கொண்டு
பூலோகம் இருண்டு விடாதா, எலி பிடிக்கலாம் என்ற கனவை முடித்துக் கொள்வது நன்று.
இப்போது கருப்பின் இன்னொரு புரட்டைப் பார்ப்போம்.
"அந்த சத்திய ஞான சபைக்கு சோதனையாக, ஆமை புகுந்தது போல் ஆரியர்கள் புகுந்து இராமலிங்க வள்ளலாரின் வழிபாட்டு முறையை தங்களுக்கு சாதகமாக சிவன் கோவில் போல் மாற்றியும், சமஸ்கிரத மந்திரங்களை ஓதியும் இழுக்கு ஏற்படுத்தி, கேவலமான பிழைப்பை நடத்துகின்றனர்."
இந்த சபையில் வள்ளராரால் பூஜிக்கப்பட்ட மரகதலிங்கம் உள்ளது.ஒவ்வொரு பிரதோஷம் அன்றும் இந்த சிவ லிங்கத்திற்கு அர்ச்சனையும், அபிஷேகமும் நடைபெறும். எனது குழந்தைப் பருவத்திலிருந்தே நான் இந்த அபிஷேக அர்ச்சனை முறைகளை கண்டு வந்திருக்கிறேன். இது ஒன்றும் இடைச்செருகல் அல்ல.
இதனால் அறியப்படுவது யாதெனில் " கோயில்களை கொள்ளை கூடாரங்களாக மாற்றிவரும் நாத்திக பகுத்தறிவு
திருட்டுக் கூட்டம், இப்போது வடலூருக்கு குறி வைத்துள்ளார்கள்"
இந்த வக்கிர புத்திகாரர்கள், வள்ளலார் ஏற்றி வைத்த அணையா அடுப்பில் தண்ணீர் ஊற்றும் முன் தடுத்து, சரியான மனிதர்களின் பொறுப்பில் இந்த தொண்டு தொடர நம் ஆதரவை பதிவோம்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
//சரியான மனிதர்களின் பொறுப்பில் இந்த தொண்டு தொடர நம் ஆதரவை பதிவோம்.//
சரியான மனிதர்களிடம் தான் பொறுப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.
'கடவுளே இல்லை' என்று பீலா விட்டுக் கொண்டிருப்பவன்களுக்கெல்லாம் இதில் என்ன கவலை வேண்டிக் கிடக்கிறது? கோடிக்கணக்கில் பணத்தை வைத்துக் கொண்டு குஜால் பண்ணிக் கொண்டிருக்கும் கி.வீ. கும்பலை முதலில் ஒழுங்கு பண்ணட்டும். அட்லீஸ்ட் அதில் உள்ள தவறுகளை சுட்டிக் காட்டவாவது நெஞ்சில் மாஞ்சா இருக்குதா இவனுங்களுக்கு?!
முரளி, இந்த "மாவீரர்கள்" கோவில்களைதான் குறிவைப்பார்கள். மற்ற இடத்தில் போனால் அவர்களின் வீரம் என்னவாகும் என நமக்கு தெரியும்.
மாயாவரத்தானின் கேள்வி நல்ல கேள்வி
முரளி,
நாதியில்லாதவங்க கோயில் வாசலில் கையேந்துவார்கள் வாழ்வாதாரத்திற்கு.
இந்த பகுத்தறிவு ஜீவிகள் வந்தேறி வந்தேறி பாப்பான் என்று அரற்றியபடியே குதித்துக்கொண்டு குறிப்பாக உண்டியலை முற்றுகையிடுவார்கள்! அதிகாரப்பிச்சை, கையாடல், திருட்டு, அசந்தால் மொத்தமாகக் கொள்ளையடிப்பது என்பது தானே இவர்களது வெங்காயத்தலைவனின் கொள்கை.
வெங்காயம் மாதிரி உரிக்க உரிக்க வந்துட்டே இருப்பானுங்க கொள்ளைக்கு.
எவ்வளவு பெரிய வெங்காயமானாலும் அதுவும் மொத்தமாக உரிக்கப்படும்
சமைத்துச் செரிக்கப்படும் மக்களால்!
கோவில் தவிர்த்து இறைவன் இல்லை என்று வேறெங்கும் இந்தப் பகுத்தறிவுகள் போகாது. போனால் இறையில்லை எனும் பகுத்தறிவுகள் அவர்களுக்கு இரையாவர் பிரியாணியாக!
பாயர பாப்பான் முரளீதரன் அவர்களே,
வடலூரார் என்ன பாப்பானா? இல்லை அவரின் ஆசிரமத்தை பாப்பானிடம் அடகு வைத்தாரா? உருவ வழிபாடு இல்லாமல் ஒளியை வைத்து கும்பிட்ட அந்த மகானின் இருப்பிடத்தில் உருவ வழிபாட்டுக்கு வித்திட்டது பார்ப்பனர்கள்தானே? வடலூரார் பெயரைச் சொல்லி கொள்ளையடிக்கவும் உழைக்காமல் உண்டு கொழுக்கவும் செய்யும் பார்ப்பனர்களை உண்மையான வள்ளலாரின் பக்தர்கள் கேள்வி கேட்பதில் என்ன தவறு?
ஒரு உண்மை.
நானும் வடலூர் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன்.
தி.க.காரனான கருப்பு கேள்வி கேட்கக் கூடாது என ஏதாவது சட்டம் உள்ளதா?
மாயவரத்தான், கால்கரி சிவா, ஹரிஹரன் வருகைக்கும் கருத்துக்கும் மிக நன்றி.
ஐயா, அனானி வள்ளலார் பக்தா,
கருப்பனை கேள்வி கேட்க கூடாது என்று யார் சொன்னார்கள்.நிச்சயமாக திக- காரன்
நிறைய கேள்விகள் கேட்க வேண்டும்.அப்போதுதான் சமூகம் சீர்படும் என்று, நான் கூட கருப்பனை பாராட்டி செந்தழல் ரவி பதிவில் பின்னூட்டம் இட்டவன்தான்.
ஆனால் பொய்,புரட்டுகளை அவிழ்த்துவிட்டு
மக்களிடம் குழப்பம் விளைவிக்க வேண்டாமே.துவேஷம் விதைக்க வேண்டாமே.
வள்ளலாரே சரியான ஆட்களிடம்தான் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு சென்றிருக்கிறார்.அதனால் போலி நாத்திக அனானி பக்தர்கள் அதை பற்றி கவலைப்பட வேண்டாம்.
நீங்கள் வடலூரின் அருகில் வசிப்பவரா?.
சத்ய ஞான சபையில் நுழைவதற்கு, வள்ளலார் ஒரு கட்டளையிட்டுருப்பார்.அது என்னவென்று சொல்லுங்கள் பார்ப்போம்.
அப்பறம் இந்த பாயர பாப்பான் அடைமொழி வேண்டாமே.அது வேசிமகன் போலிக்காக நான் எடுத்த அவதாரம்.அது முடிந்து போன கதை.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.
//
வள்ளலாரே சரியான ஆட்களிடம்தான் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு சென்றிருக்கிறார்.அதனால் போலி நாத்திக அனானி பக்தர்கள் அதை பற்றி கவலைப்பட வேண்டாம்.
//
எவன்டா சரியான ஆளு? வள்ளளார் சொத்தினை கொள்ளையடிக்கும் பாப்பார பன்னாடைகளா?
நக்கீரன் இதழில் வந்துள்ளதை விடாது கருப்பு எடுத்து பதிவு போட்டுள்ளார். நீங்கள் நக்கீரன் போன்ற பத்திரிக்கைகளை படிக்கமாட்டீர்கள் என நினைக்கின்றேன். அதில் என்ன வந்துள்ளது என்று படித்து விட்டு கருத்து சொல்லுங்கள். அந்த கட்டுரையில் பெரியார் மத பக்தர்கள் யாரும் கேள்வி கேட்கவில்லை. வள்ளலாரின் பக்தர்கள்தான் கேள்விகளை அடுக்குகின்றார்கள்.
தமிழ் OBC பட்டியல் இடி பெரும் ‘தமிழ்ர்கள்’ உண்மையாக தமிழர்களே கிடையாது. இந்தி தெலுங்கு கன்னடம் பேசுபவர் ஏராளம்.
கருணாநிதி வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
வைகோ வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
ராமதாஸ் வீட்டில் பேசும் மொழி எது? தமிழா? இல்லை தெலுங்கு!
நீங்கள் வெறுக்கும் ’பாப்பான்’கள் வீட்டில் என்ன மொழி பெசுபாவர்கள்? தமிழே!
சரி, விமானநிலையம் சென்றால் அங்கு இட ஒதுக்கீட்டில் வந்த ஊழியர்கள் எந்த மொழி பேசுவார்கள்? தமிழா? இல்லை இந்தி!!!
தி மு க தேர்தலில் என்ன தமிழுக்கு என்ன உறுதிமொழி அளித்தார்கள் ?
விமாங்களில் தமிழ் அறிக்கைகள் கொண்டுவருவது.
வந்ததா? இல்லை.
இன்னொரு உண்மை. கருணாநிதி அவர் வாழ்நாளில் சாடும் சமூகம் எது? தமிழ் பேசும் சமூகம் பெரும்பாலுமானோர்.
அவர் தலையில் தூக்கி போற்றும் பெரும்பாலும் யார்? இந்தி அரசியல் வாதிகள்.
தைப்பூச தினத்தன்று, தங்களின் குடும்பத்தார், பல காலமாக,வடலூர்
பிராமண சங்கம் சார்பாக, மோர், தண்ணீர், உணவு, போன்ற பல சேவைகளை, செய்ததாகக் கூறியுள்ளீர்கள், வள்ளளார் ஏற்படுத்தியது, சபை, கோயில் அல்ல. அனைத்து
மதத்தினருக்கும், சாதி சமயமின்றி வழிபட உருவாக்கபட்டதுதான், சுத்த சன்மார்க்க சபை, ஆனால் தாங்கள் தங்கள் குடும்பம், பிராமன சமுதாயத்துக்கு உதவியதாக, தங்கள்
பதிவில் கூறியுள்ளீர்கள். தங்களது தவறை முதலில் உனருங்கள். மற்றவரின் தவறை பிறகு சுட்டிகாட்டுங்கள்.
தைப்பூச தினத்தன்று, தங்களின் குடும்பத்தார், பல காலமாக,வடலூர்
பிராமண சங்கம் சார்பாக, மோர், தண்ணீர், உணவு, போன்ற பல சேவைகளை, செய்ததாகக் கூறியுள்ளீர்கள், வள்ளளார் ஏற்படுத்தியது, சபை, கோயில் அல்ல. அனைத்து
மதத்தினருக்கும், சாதி சமயமின்றி வழிபட உருவாக்கபட்டதுதான், சுத்த சன்மார்க்க சபை, ஆனால் தாங்கள் தங்கள் குடும்பம், பிராமன சமுதாயத்துக்கு உதவியதாக, தங்கள்
பதிவில் கூறியுள்ளீர்கள். தங்களது தவறை முதலில் உனருங்கள். மற்றவரின் தவறை பிறகு சுட்டிகாட்டுங்கள்.
Post a Comment