Saturday, November 25, 2006

வாரியார் சுவாமிகள்.

வேலூர் அருகில் உள்ள ரத்னகிரி மலையில் உள்ள முருகப் பெருமானை தரிசிக்க சென்றிருந்தோம். சிறிய மலையாய் இருந்தாலும், மற்ற கோயில்களில் காணப்படாத அளவுக்கு ஒரு சுத்தம், அப்படி ஒரு பராமரிப்பு. இந்த விஷயங்களே மனதிற்கு ஒரு நிறைவை தந்தது. கோயிலின் ஆரம்ப கால தோற்றத்தையும், புதிய கட்டிட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததையும் புகைப்படமாக எடுத்து வைத்திருந்தார்கள். வாரியார் சுவாமிகளின் பெரு முயற்சியும், கோயில் சிறப்பாக எழும்ப காரணம் என்றும்
பக்தர்கள் பேசக் கேட்டேன். வாரியார் சுவாமிகளின் புகைப்படம் ஒன்றும் (எம்.ஜி.ஆர் உடன் இனைந்து இருப்பது) இருந்தது.

முருகன் எங்கள் குல தெய்வம். ஒரு காலத்தில் எனது ஒவ்ஒரு அசைவுக்கும் முருகனை அழைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தேன்.வடக்கே வசித்த நாட்களில், நான் முருகா என்பதை, அவர்கள் முர்கா(சேவல்/கோழி) என்று புரிந்துகொண்ட தமாஷெல்லாம் நடந்துள்ளது ( க்யோங் பார்பார் முர்கா முர்கா போல் ரஹே ஹோ?).

முருகனை நினைக்கும் பொழுதெல்லாம் வாரியார் சுவாமிகளின் நினைவை தவிர்க்க இயலாது. எனது சொந்த ஊரான நெய்வேலியில் ஸத்ஸங்கம் மற்றும் மனித்வீபம் என இரு இடங்கள். இங்குதான் வாரியார் சுவாமிகள், புலவர் கீரன், பால கிருஷ்ன சாஸ்திரிகள், அனந்த லஷ்மி நடராஜன் அகியோரின் ராமாயனம், மஹாபாரதம், பாகவதம், கந்த புரானம், திருப்புகழ் உபன்யாசங்கள் நடைபெறும்.

வாரியார் சுவாமிகளின் உபன்யாசம் என்றால் நாங்கள் முன் வரிசையில் அமர்ந்திருப்போம். அவர் சிறுவர்களிடம் கேள்வி கேட்பார், பதில் சொன்னால் ஒரு பரிசு. நான், எனது அண்ணன், அக்கா அனைவரும் இது போன்ற பரிசுகளை வாங்கியிருக்கிறோம்.
இங்குதான் வாரியார் சுவாமிகளுக்கு தி.க வினர் செருப்பு மாலையிட்டனர்.

வாரியார் சுவாமிகள், வடலூர் சத்ய ஞான சபைக்கும் நிறைய திருப்பணி செய்துள்ளார்கள். வாரியார் செய்யாத இறைசேவையும், தமிழ் சேவையுமா?. அவரைப் போன்ற ஆஸ்திகர்களின் கண்களுக்கு,வடலூர் சபையில் தெரியாத குற்றமும்/குறையும், அவருக்கு செருப்பு மாலை போட்டு அவமானப் படுத்திய, நாத்திக திருட்டுக் கூட்டங்களின் கண்களுக்கு தெரிவதின் பின்னால் இருப்பது நாத்திகர்களின் சூழ்ச்சியா?/பிழைப்பா?.

கி.வீ ஆர்பாட்டம் செய்ய வடலூர் வருகிறாராம். வரட்டும், முதலில் வாரியார் மாதிரி அடியவர்களின் சுயமரியாதைக்கு செருப்பு மாலையிட்டு செய்த அவமரியாதைக்கு மன்னிப்பு கேட்கட்டும். பிறகு கேள்வி கேட்கட்டும்.

கி.வீ உனக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன தொடர்பு?. கருப்பு சட்டையை உதறிவிட ஏன் முடிவெடுத்தாய்?.

என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

4 comments:

Anonymous said...

இங்குதான் வாரியார் சுவாமிகளுக்கு தி.க வினர் செருப்பு மாலையிட்டனர்.
this is true?

சீமாச்சு.. said...

அன்பு அத்வைதி..
என்னதான் இது நடந்திருந்தாலும்.. இறந்து போன ஒரு பெரியவரின் வாழ்க்கையில் நடந்த ஒரு கசப்பான.. யாருமே நினைவில் வைத்திராத ஒரு நிகழ்ச்சியைப் பற்றிப் பொதுவில் எழுதி ஏன் மறுபடியும் கசப்பைக் கிளறுகிறீர்கள்..? வாரியார் பர்றி எழுத விஷயமாயில்லை.. இல்லை வீரமணி பண்ணிய இது போன்ற நற்செயல்கள் வேறுதான் இல்லையா..
நான் உங்களை மறப்போம்.. மன்னிப்போம் என்றெல்லாம் சொல்லச் சொல்லவில்லை.. நீங்கள் இப்படி எழுதியதை வாரியார் சுவாமிகளே கூட விரும்ப மாட்டாரென்பது என் கருத்து
அன்புடன்
சீமாச்சு...

murali said...

அன்பு சீமாச்சு,
நெஞ்சு பொறுக்க மாட்டாது துடிக்கிறது.எது நம்மை இது போன்ற கயமைத்தனத்தை எல்லாம் பொறுத்துக் கொள்ளச் செய்கிறது.

இந்த நிகழ்ச்சியை படிக்கவே நமக்கு கஷ்டமாக இருக்கிறதே.ஆனால் இந்த கருப்பு சட்டைகள் இதையெல்லாம் தொடர்ந்து செய்து கொண்டுதானே இருக்கிறார்கள்.

இந்த லஷனத்தில் பெரியார் சிலைக்கு ( கவனிக்க; சிலைக்கு ) சந்தனம் பூசியதற்கு எத்தனை கூத்து அடித்தார்கள்.

கருப்பு சட்டை தமிழகத்தில் ஒரு கரும்புள்ளி, அதன் மீது உண்மை என்னும் வெளிச்சம் பாய்ச்சப் படவேண்டும்.
அதற்கான சிறு முயற்சிதான் இது.

உண்மை கசக்கலாம்.
ஆனால் கசப்பு மருந்து உடம்புக்கு நல்லது.இது போன்ற கரிய பக்கங்கள் கருப்புகளின் நிஜ முகத்தை மக்களுக்கு வெளிப்படுத்தும்.வடலூர் சபை நடவடிக்கைகளில் கேள்வி எழுப்பவும், ஆர்பாட்டம் செய்யவும் முனைபவர்களின் தகுதி எத்தகையது என்பதுதான் கேள்வி.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

girish said...

கி.வீ, சும்மாங்க.. ஏதாவது செஞ்ஞாகணுங்கறத்துக்காக எதையாவது எதுத்துகிட்டு நிக்கற ஜனங்க.

பெரியாரின் கொள்கையில் உறுதியாக இவர்கள் நடந்திருந்தால் இப்படி கொள்கைப் பிறழ்வு ஏற்பட்டிருக்காது.

உருவ வழிபாடு இல்லையென்று சொன்ன புத்தரையே உருவமாக்கி வழிபட்ட மக்கள் கொண்ட இந்திய மண், என்பதை மனதில் வைத்துக்கொள்ளவும்.

(சும்மா மேம்போக்கா எழுதினது.. கண்டுக்காதீங்க)