Saturday, March 31, 2007

CREAMY LAYER கயவர்களே.

"ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கைய ரல்லா தவர்க்கு".
கயவர், தம் கன்னத்தை இடித்து உடைக்கும்படி கை உடையவரல்லாத மற்றவர்க்கு, தாம் உண்ட எச்சில்
கையையும் உதறமாட்டார், என்ற குறளுக்கு ஒரு உதாரணமாகவே இருந்து வருகிறார்கள் கிருமி லேயர் கயவர்கள்.அவர்கள் கன்னத்தை
இடித்து அடேய் போதுமடா உங்கள் பேராசை என்று சொல்வதுபோலவே வந்துள்ளது உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு. யார் பிற்படுத்தப்பட்டவர் என்று கண்டுபிடிப்பது, பிரம்மனும்,
ஹரியும் முயன்று முடியாமல் போன சிவனின்அடியும் முடியும் போல அத்தனை கடினமான காரியமா என்ன?

இலவச கேஸ் அடுப்பு, இலவச நிலப்பட்டா வழங்க, வறுமை கோட்டிற்கு
கீழே உள்ளவர்களை ஆறே மாதத்தில் கண்டுபிடித்த அரசால் இதை
கண்டுபிடிக்க முடியாதா என்ன? முயன்றால் முடியும், முயலக் கூடாது என்பதுதானே பிற்படுத்தவர் வேஷம் கட்டும் இந்த பணக்கார ஓட்டு வேட்டை அரசியல்வாதிகளின் கொள்கை.

"ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடை மாந்தர் சிறப்பு"
உணவும், உடையும் எல்லோருக்கும் பொதுவானது. அம் மக்களில் சிறப்பானவர்கள் என்பவர்கள், தகாத செயல்களை செய்வதற்கு வெட்கப்படுபவர்கள் என்பவர்தாமே. அதுவும் நூல் பல கற்றவர், அறிவில் சிறந்தோர் இதில்
ஒரு படி மேலே அல்லவா இருக்க வேண்டும்.

ஆனால் இந்த கிருமி லேயர்கள், ஏழைகளின் சலுகைகளை நாங்களும்
அனுபவித்தே தீருவோம் என வெட்கங்கெட்டு திரிகின்றனவே.

"அக்கி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெக்கி வெறிய செயின்"
யாரிடத்திலும் பொருளை கவர விரும்பி
பொருந்தாதவற்றை செய்தால் உன் அகன்ற அறிவால் என்ன பயன்.
சமூகத்தில் பண பலம், அதிகார பலம், வீடு, நிலபுலன் என சவுகரிமாய்த்தானே இருக்கிறீர்கள். ஏன் காட்டிலேயும்,
கழனியிலேயும் வியர்வை சிந்த உழைக்கும் பாட்டாளிகளின்,
ஏழைகளின் சலுகைகளை கவர விரும்பிகிறீர்கள்.தூசு புகாத அறைகளில்
குளிர்காற்று வாங்கிக்கொண்டு, குந்தி தின்னும் கோமான்களே, வெள்ளைப்
பறங்கியைப்போல நிறத்தில் மின்னும் சீமான்களே, உங்களுக்கு இட
ஒதுக்கீடு ஒரு கேடா?.


"மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு"
தன் மூன்றடியால் மூவுலகத்தை அளந்த
மஹாவிஷ்னு தாவிய பரப்பு எல்லாவற்றையும், சோம்பல் இல்லாத
அரசன் ஒரு சேர அடைவான், என்பதற்கு உதாரணமாய் நமது அரசியல்
வியாதிகள். ஒரு வட்டம், மாவட்டம் பதவி கிடைத்தால் கூட போதும், உடனே ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்த்து விடுகிறார்கள். இவர்கள் எல்லாம் எந்த விதத்தில் பிற்படுத்தப் பட்டவர்கள்?.

இட ஒதுக்கீட்டிற்கு பொருளாதார அளவுகோள்தான் சரியானது.

"நடுவின்றி நன்பொருள் வெக்கின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்"
ஏ கிருமி லேயர் பணக்கார பேராசை பிச்சைக்காரர்களே, ஏழைகளுக்கு சேர வேண்டிய இடஒதுக்கீட்டை
மனசாட்சி சிறிதும் இல்லாமல் நீங்கள் கவர விரும்பினால், நீங்கள் பெரிய குற்றம் செய்தவர்கள் ஆகிறீர்கள். நீங்களும், உங்கள் குடியும்
கெட்டுப் போவீர்கள்.

ஏ கிருமி லேயர்களே மனசாட்சி என்று ஒன்று இருந்தால், நாங்கள் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்தாலும், முற்பட்டவர்களே , ஆதலால் எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்று முன் வந்து அறிவிப்பு செய்யுங்கள்.

ஏழை பாழைகளின் உரிமைகளை தட்டிப் பறித்து சொகுசு வாழ்க்கை
வாழாதீர்கள். அப்படி செய்தால் அரசாங்கம் எத்தனை சலுகைகளை
கொடுத்தாலும்.

போவீர் போவீர் ஐயோ என்று போவீர்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

12 comments:

Thamizhan said...

கேள்வி கேட்பவர் உண்மையிலேயே யோக்கிய்ராய் நல்ல மனது படைத்தவராய் இருந்தால் கிரீமி லேயர் அனைவர்க்கும் பொதுவாக இருக்கவேண்டும் என்று சொல்ல வேண்டாமா?

ரங்குடு said...

அப்பா முரளி:

5 முறை முதலமைச்சர் ஆக ஆண்டு 6 தலை முறைக்கு
சொத்து சேர்த்த எங்கள் கலைஞரை விட நாங்கள் ஒன்றும்
அதிகமாக அனுபவித்து விட வில்லை.

கொடைக்கானல் முதல் ஹைதராபாத் வரை சொத்துக்களை
வாங்கிக் குவித்து, தன் உடன் பிறவாத சகோதரியுடன்
வாழ்வாங்கு வாழும் செல்வியை விட நாங்கள் ஒன்றும்
சம்பாதித்து விட வில்லை.

இட ஒதுக்கீட்டில் நாங்கள் ருசி கண்ட பூனைகள்.
ருசியை விட முடியுமா?

இட ஒதுக்கீடு என்பது இதுவரை கண்கள் இல்லாத
எமக்கு, கிடைத்த கண்கள் போல. அதை இழக்க நாங்கள்
என்ன கேனைகளா?

இப்போது கிடைத்தது போதும் என்று போய் விட்டால்,
எங்கள் எழாவது தலை முறை பிழைப்பது எப்படி?


அன்புடன்:
ரங்கா.

வடுவூர் குமார் said...

இதுக்கும் பின்புலம் "மஞ்சள்" கலர் தான் வேண்டுமா?!!
தற்செயலா? உள்குத்தா?
:-))

Anonymous said...

இட ஒதுக்கீட்டுக்கு பொருளாதார அளவுகோல் சரியானது என்பது சரியான வாதம். நச்..!!!

Anonymous said...

ஏமாறாதவன், அறியாதவன் என்ற பெயர்களில் எல்லாம் மறைந்து எழுதும் மடசாம்பிராணியான மடராமனும், பார்ப்பன அடிவருடியான அரைவிந்தன் நீலகுண்டனும் ராமகோபாலனின் தங்கள் பதிவுக்கு விளக்கம் அளிப்பார்களா?

ஜடாயு said...

முரளி,

குறளின் குரலில் உங்கள் கருத்துக்களை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் நிலைப்பாடு இட ஒதுக்கீட்டுக்கு எதிரானதல்ல, ஆனால் அது சாதிவாரியாக இல்லாமல் தேவைப்படும் எல்லா ஏழை மக்களுக்கும் சென்றூ அடைய வேண்டும் என்பதாகக் கொள்கிறேன். சரிதானே?

// ஏழை பாழைகளின் உரிமைகளை தட்டிப் பறித்து சொகுசு வாழ்க்கை
வாழாதீர்கள். அப்படி செய்தால் அரசாங்கம் எத்தனை சலுகைகளை
கொடுத்தாலும். //

அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை!

murali said...

"இதுக்கும் பின்புலம் "மஞ்சள்" கலர் தான் வேண்டுமா?!!
தற்செயலா? உள்குத்தா?"

வருக, வடுவூர் குமார். தற்செயலாக அமைந்ததுதான்.மஞ்சள் எனக்கு மிகப் பிடித்த நிறம்.ஆகவே டெம்ப்ளேட்டை மஞ்சள் நிறத்தில் வடிவமைத்தேன்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்,

murali said...

வருக செந்தழல்,
கருத்தளித்தமைக்கு நன்றி.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

murali said...

வருக ஜடாயு,
" உங்கள் நிலைப்பாடு இட ஒதுக்கீட்டுக்கு எதிரானதல்ல, ஆனால் அது சாதிவாரியாக இல்லாமல் தேவைப்படும் எல்லா ஏழை மக்களுக்கும் சென்றூ அடைய வேண்டும் என்பதாகக் கொள்கிறேன். சரிதானே?"

மிகச் சரி, அதைத்தான் சொல்ல வந்தேன்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

murali said...

வருக தமிழன்,
"கிரீமி லேயர் அனைவர்க்கும் பொதுவாக இருக்கவேண்டும் என்று சொல்ல வேண்டாமா"?

நான் சொல்லாமல் விட்டுருந்தாலும்
எனது நிலைப்பாடு அதுதான்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

murali said...

வருக ரங்கா,
சிக்ஸரும், போருமா தூக்கி
தூக்கி அடிச்சிருக்கீங்களே1!.

வருகைக்கு நன்றி,
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.

murali said...

"ஏமாறாதவன், அறியாதவன் என்ற பெயர்களில் எல்லாம் மறைந்து எழுதும் மடசாம்பிராணியான மடராமனும், பார்ப்பன அடிவருடியான அரைவிந்தன் நீலகுண்டனும் ராமகோபாலனின் தங்கள் பதிவுக்கு விளக்கம் அளிப்பார்களா"?

ஐயா அனானி,
?????. ஒன்னுமே புரியலையே!!!!.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.