Tuesday, October 03, 2006

தேன்கூடு போட்டி/விடுதலை

முரளி உன்னச் சொல்லி குத்தமில்லடா, உனக்கு மாசம் பதினஞ்சாயிரம் ரூவா சம்பாதிக்கர மாதிரி ஒரு வேலைய கொடுத்து, கிரண்பேடி வீட்டுக்கு பக்கத்தல பங்களாமாதிரி ஒரு வீட்ல சொகுசா தங்கவச்சாம் பாரு, நம்ம கம்பேனிக்காரன் அவன சொல்லனும்டா. மிதப்புடா,
சோத்துக்கு சிங்கி அடிச்சதும், வேலைக்கு நாயா அலைஞ்சதும் மறந்து போச்சா?. ... இது ராஜ்குமார்.

டேய் நீ சும்மா பொத்துரா, அவன் உசந்த விஷயத்த பத்தி பேசறான்..... இது இர்பான்.

உசந்த விஷயத்த பேசர அளவுக்கு இவன் ஒழுக்கமா? ஒரு நாளக்கி ஒரு பாக்கெட் சிகரெட்டு, வாரத்துக்கு நாலு தடவயாச்சும் ஜின்னுல எழுமிச்சம் பழத்த புழிஞ்சு சரக்கு. ஸ்டார் ஹோட்டல்ல சைட் டிஷ் வாங்காம
மட்ட ஊறுகாய நக்கிட்டு மானத்த வாங்குறவண்டா இவன்...இது ராஜ்குமார்.

ஆனா கவுச்சி சாப்பிடாமா கட்டுப்பாடாத்தான இருக்கான்....இது இர்பான்.

ஐயரு வூட்ல பொறந்திருந்தா நானும் அப்படித்தான் இருந்திருப்பேன். இந்த சண்டிகர் ஆபீசுல பொண்ணுங்ககிட்ட அதிக கடலை போடரது இவன்தாண்டா. அத்தன குட்டிகளுக்கும் இவனத்தான் புடிச்சிருக்காம், இவன் ஜென்டில் மேனாம். பஞ்சாப்புல குட்டிங்களுக்கு வெட்கம் மானமே கிடையாது....இது ராஜ்குமார்.

டேய் மசிராண்டி வாய மூடுறா, மரியாதை கெட்டுப்போய்டும்...உனக்கு அவங்களோட பேச ஹிந்தியும் வராது, இங்லீஷும் வராது, அந்த பொச்சரிப்புல பொண்ணுங்கள தப்பா பேசாத....இது நான்.

ஒக்கா மக்கா, நிறுத்துடா, யோக்கியன்மாரி பேசற. அன்னிக்கு சுக்னா லேக்காண்ட ஒரு பொண்ணு தெரியாம இடிச்சுட்டு போனப்பறம், மச்சான் மெத்துன்னு இருந்துதுடான்னு சொன்னவன்தாண்டா நீனு....இது ராஜ்குமார்.

ஆமாண்டா, உள்ளத சொன்னன், அதுக்காக நான் என்ன உன்னையமாரி நைட்டேல்லாம் நீலப்படம் பாத்தா அழிஞ்சிகிட்டு இருக்கேன்.
போடா வேலையப் பாத்துகிட்டு, நியாயம் பொளக்க வந்துட்டாரு....இது நான்.

எக்கேடும் கெட்டுப்போடா, நல்லா சமைச்சு நாலு வேலையும் நக்கர நாயி, நீயெல்லாம் திருவோடு ஏந்தப் போறன்னு சொன்னா எவன் நம்புவான். சாமியாராப் போரதா இருந்தா சீக்கிரம் போ. இருக்கறவன கிறுக்குப் புடிக்க வக்காத.....இது ராஜ்குமார்.

போத்தாண்டா போறன் என்று சொல்லி ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் இருப்பிடம் விட்டுப் போய் நின்ற இடம், ரிஷிகேஷ்.

ரிஷிகேஷில் முனி கீ ரேத்தீ என்ற இடத்தில் கால் பதித்தேன். பிறகு தேடியது சந்யாசம் வாங்க ஒரு வழியை. ஒரு மலை உச்சியில் இருந்த ஆஸ்ரமத்தில் வசித்த சாமியாரிடம் விஷயத்தைச் சொன்னேன்.

சாமி: ஏன் இந்த முடிவு?.
நான்: சாவு நிச்சயம்னு தெரிஞ்சுப்போச்சு, அதுக்கு முன்னால கடவுளை
உணர்ந்துடனும்னு நினைக்கிறேன்.
சாமி: எப்பேலேர்ந்து இந்த உணர்வு?.
நான்: அம்மாவோட மறைவுக்கு அப்பறம்.
சாமி: மயான வைராக்கியம் அதிக நாள் நிக்காது.
நான்: அது தொடக்கம்தான், தீவிரமானது அதுக்கு பிறகுதான்.
சாமி: எந்த அளவுக்கு தீவிரம்?.
நான்: குரு சிஷ்யன தண்ணியில அமுக்கி, வெளியில விட்டப்பறம், சிஷ்யன்
காத்துக்காக தவிச்ச தீவிரம். விவேகாநந்தர் கூட சொல்லியிருக்காரே;
தீவிரத்தோட அளவ பொறுத்து ஒரு மண்டலத்துக்குள்ளேயே இறை
அனுபவம் சாத்தியம்தான்னு.
சாமி: இது படிப்பறிவு.
நான்: அனுபவ அறிவும் உண்டு, காஞ்சி பரமாச்சாரியார் மூலமாக.
சாமி: தரிசனம் செஞ்சதுண்டா?.
நான்: குல குரு ஆனால் நேர்ல பார்த்தது கிடையாது. அவர் சமாதி ஆன
இரவு கனவுல வந்து ஆசீர்வாதம் பன்னிட்டு போனார். அந்த அனுபவம்
மட்டும் இல்லன்னா என்னிக்கோ நாத்திகன் ஆயிருப்பேன்.
சாமி: அப்ப தகுதி இருக்குன்னு நம்பற. வீட்ல அனுமதி
வாங்கியாச்சா?.
நான்: இல்ல, யார்கிட்டயம் சொல்லாம ஓடி வந்துட்டேன்.
சாமி: தப்பு, பெற்றோர்கள் சம்மதம் இல்லாம சன்யாசம் கொடுக்க மாட்டார்கள்.
நான்: சம்மதம் குடுப்பாங்கன்னு தோனல, ஆதி சங்கரை கூட அவங்க அம்மா
அனுமதிக்களையே அப்பறம் முதலை புடிச்ச நேரம்தான அனுமதிச்சாங்க.
சாமி: நீயே சொல்லிட்டியே, பெத்தவங்க அனுமதி முக்கியம்.
நான்: திரும்பி போற எண்ணம் இல்ல.
சாமி: சரி, ஒரு மூனு நாள் ஆஸ்ரமத்துல தங்கி இரு. நல்லா திரும்பவும்
யோசி. அப்பறம் பாக்கலாம்.

தினமும் காலையில் யோகாசனமும், பிரானாயாமமும் பிறகு நாள் முழுவதும் கங்கை கரையிலும், காடுகளுக்குள்ளும் அலைந்து திரிந்தேன்.
வீட்டை விட்டு ஓடி வந்து பண்டாரங்களாய் சுற்றியவர்களையும் சந்தித்தேன்.
அதில் ஒரு பண்டாரம் பாம்பு கடித்தால், உள்ளுக்கு வெத்தலையில் மிளகு வைத்து கொடுத்து, கடிவாயில் மிளகாயை அரைத்து தடவி கோழியோட
குதத்தை வைத்து அமுக்கினால், எரிச்சலில் குதம் இன்க் பில்லர் போல செயல்பட்டு விஷத்தை எடுத்துவிடும் என்று டிப்ஸ் வேறு கொடுத்தார். ஒரே தமாஷாக இருந்தது. இந்த விவாதமெல்லாம் நடந்த பொழுது இரவு மணி ஒன்று.
ராம் ஜூலாவிலிருந்து, நீல் கண்ட் வரை நடந்தே சென்றேன். எனது தகுதியைப் பற்றி நானே சுய விமர்சனம் செய்து கொண்டேன். நான் சந்நியாசி ஆவதற்கு தகுதியானவன்தான் என முழுதும் நம்பினேன். பூனூல் இரண்டாகப் பிரிக்கும் உடலின் கீழ் பகுதியில் உள்ள பசியையும், காமத்தையும் வென்று, மேல் பகுதியில் உள்ள இதயத்தையும், சுவாசத்தையும், அறிவையும் கட்டுக்குள் கொனர்ந்து கடவுளை உணர்ந்து விடலாம்.

அத்தனையும் மூன்றாவது நாள் காலைவரைதான். மலை மீதிருந்து கங்கையின் ஒட்டத்தை அவதானித்துக்கொண்டிருந்த பொழுது எனது பக்கத்தில் நின்று, என்னைப் பார்த்த ஜப்பானியப் பெண்ணின் புன்னகையில் அத்தனை வைராக்கியமும் அடித்துக்கொண்டு போய்விட்டது.

உள்ளேயிருந்து ஒரு குரல்; டேய் டேய் முரளி காமத்தை வெல்ல முடியலடா உன்னாள.

நான்: நான் திரும்பி போறன்.
சாமி: சரி போ, என்ன புரிஞ்சிகிட்ட?.
நான்: கடவுளை உணர்வதுக்கும், கடவுள் அருள் வேண்டும்.
அதுவரைக்கும் தாமர இலை தண்ணி மாதிரி வாழனும்.
விடுதலை சுலபமில்லை.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

2 comments:

murali said...

ஐயா பலகை,
விமர்சனத்திற்கு நன்றி.சன்யாசம்
வாங்க வேண்டும் என்ற உணர்வு, பல கால கட்டங்களில் எற்படும் பல்வேறு நிகழ்வுகளின் விளைவாக ஒருவருக்குள் ஏற்படும் மாற்றம்.

கதை நாயகனுக்கு ஏற்பட்ட அந்த உணர்வின் நியாயம், வாசகனுக்கு உறைக்க
வேண்டுமானால், கதை பெரிய கதையாக வடிக்கப் பட்டிருக்க வேண்டும். கதை எழுதிய பிறகு நானும் இந்த குறைபாட்டை உணர்ந்தேன்.

மேலும் நுகர்வு கலாச்சாரத்தின் பிடியில் இருக்கும் இளைஞர்களாலும், துறவை சினிமா மூலம் மட்டும் அறிந்தவர்களுக்கும், கதை நாயகனின் உணர்வை உள் வாங்குதல் மிக சிரமம்.

நாயகன், சன்யாசம் வாங்க விரும்பிய ...மற்றும் பின்வாங்கிய காரணங்களை தெளிவாக கொடுத்துள்ளதாகவே நினைக்கிறேன்.

நீங்கள் வெகு ஜாக்கிறதையாக, கதையின் முக்கியமான பகுதிகளை விமர்சனம் செய்யாமல் விட்டிருக்கிறீர்கள்.
மேலு ஒரு க்ளிஷே ஜோக் வேறு.

உங்கள் கண்ணாடியின் நிறம்..சிகப்பு (அ)கறுப்பு(அ)பச்சை. உங்களுக்கு தேவை வெள்ளை கண்ணாடி அல்லது வெள்ளெழுத்துக் கண்ணாடி.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

வித்தியாசமான சிந்தனை. வாழ்த்துக்கள்.