Tuesday, September 23, 2008

மானமிகு வீரமணி?.?.?

சற்று நேரத்திற்கு முன் புதினம் இணைய தளத்தில், தி.க வினர் ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து நடத்திய தொடருந்து மறியல் போராட்டம் குறித்த செய்தியைப் படித்தேன். உங்கள் உணர்வு பாராட்டத்தக்கதே. அதே நேரத்தில் வீரமணியின் நண்பர் கலைஞரிடம் சொல்லி மத்திய அரசை சற்றே மிரட்டச் சொல்லக் கூடாதா?. கலைஞர் மத்திய மந்திரி பதவி ஆசையில் சோனியாவின் காலடியில் அல்லவா விழுந்து கிடக்கிறார்.

இதற்கெல்லாம் ஒரே தீர்வு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத் தமிழர் பிரச்சனையை முன்னிருத்துவதே. ஈழத் தமிழரை கொன்று குவிக்க அனைத்து
உதவிகளையும் செய்து கொடுக்கும் காங்கிரசையும் அதன் கூட்டனி கட்சியான தி.மு.க வையும் தமிழகத்தில் மண்ணை கவ்வச் செய்ய வேண்டும்.

வீரமணி இவை எதையும் செய்ய மாட்டார். ஏனென்றால் ஈழத் தமிழருக்கான
அவரது குரல் வெற்று கோஷம்தான். அதற்கு சாட்சி இன்று நடந்த போராட்டம்தான்.

நடப்பதென்னவோ ஈழத் தமிழருக்கான போராட்டம் அதில் காங்கிரசைக் கண்டித்தோ, தி.மு.க வை கண்டித்தோ ஒரு வார்த்தையும் பேசப்படவில்லை.
பேசிய விஷயங்களை பாருங்கள்.

1. ஒரிசா, மத்தியப் ப்ரதேசம், ராஜஸ்தான், கர்நாடகத்தில் கிருத்துவர்கள்
தாக்கப்படுகிறார்கள்.

2. சிறுபான்மையினர் மீது இந்துத்துவவாதிகள் குறிவைத்து தாக்குதல்
நடாத்துகிறார்கள்.

3. இலங்கையில் ஸ்மார்த்தர் என்ற பார்ப்பனர்களுக்கும், திராவிடர்களுக்கும்
இடையே இனப்போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

மானமிகு வீரமணியே, மேலே நீங்கள் பேசிய கருத்துக்களை படித்து சிங்களமும், மத்திய அரசும், கலைஞர் அரசும் நடுநடுங்கிப் போய், ஈழத் தமிழர்
படுகொலையை உடனே நிறுத்தி விடுமாம்.

நல்லாத்தான் பிழைப்பு நடத்துகிறீர்கள் ஐயா!!!!!!!!!!.

என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.

No comments: