Saturday, February 10, 2007

காவேரித் தண்ணீரும், கன்னடர்களும், தீர்வும்.

நமது நாட்டின் பெரும்பான்மையான நதிகள் பெண்களின் பெயர் கொண்டவைதான். நதிகள் அன்னையருக்கு இனையாக வைத்து
மதிக்கப்படுகின்றன, துதிக்கப்படுகின்றன.

காவேரியின் பிறந்தகம் கர்நாடகம், புக்ககம் தமிழ்நாடு. புகுந்த வீட்டில்தான் ஒரு பெண் தாய் என்ற பெரும் பேறு அடைவதால் தமிழகத்தின் தவப் புதல்வர்களுக்கே அன்னை காவேரியிடம் அதிக உரிமை உள்ளது.

அதற்கு ஏற்றார்ப்போலத்தான் தமிழகத்திற்கு நியாயமான அதிக பங்கை அறிவித்து தீர்ப்பு வெளியாகி உள்ளது. இந்த அளவு போதுமானதோ, பற்றாக் குறையோ, எதுவாக இருந்தாலும், ஏற்றுக் கொள்வதே அறிவுடைமையாகும். தமிழகம் தீர்ப்பை ஏற்று, அதிக பங்கிற்காக மேல் முறையீடு ஏதும் செய்யாமல் இருந்தால், இந்த விவகாரம் அதிக பிரச்சனை ஆகாமல், இரு தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதாய் சில நாட்களில் மாறிவிடும் என்பது எனது அபிப்ராயம்.

அதை விடுத்து தமிழக அரசியல்வாதிகள் ஏதும் குட்டையை குழப்பினால்
கர்நாடக வாழ் தமிழர்களுக்கு பெரும் பிரச்சனையாய் போய்விடும். ( காவேரிப் பிரச்சனையில் மாட்டி பெங்களூருவில் அடிவாங்கியவன் நான், அந்த அனுபவத்தை தனிப்பதிவாக அப்புறம் எழுதுகிறேன் )அதனால் வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்வதிலும், அதை செயல்படுத்துவதிலும் மட்டுமே முனைவது நல்லது.

மேலும் அதிக அளவு தண்ணீர் வேண்டும் என்பதை கோரிக்கையாக்குவதை விடுத்து, தமிழகத்தில் உள்ள நீர் வளங்களை பாதுகாப்பதிலும், புதிய நீர்வள
ஆதாரங்களை உருவாக்குவதிலும் முனைய வேண்டும்.

பாட்டாளி மக்கள் கட்சி, கிராமப் புரங்களில் உள்ள ஏரி குளங்களை,
பசுமைத்தாயகம் அமைப்பு மூலமாக தூர் வாரி சரி செய்தது. அதைப்போன்றதொரு காரியத்தை அனைத்து மக்களும் பங்குகொண்டு
மேலும் தீவிரமாக செயல்படுத்தலாம்.

தமிழகத்தில் தற்போது உள்ள ஏரி, குளங்களில் பஸ் ஸ்டாண்ட் கட்டாமல், அவற்றை நல்லவிதமாக பாதுகாக்கலாம். மழை நீர் வீணாவதை தடுத்து அங்கங்கே தடுப்பனைகளை உருவாக்கலாம்.

அரசியல்வாதிகள் மணல் கொள்ளையடிப்பதை தவிர்த்து, ஆற்றுப் படுகைகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர உதவி செய்யலாம்.

மன்னர்களால் தொலை நோக்கு சிந்தனையோடு உருவாக்கப்பட்ட ஏரி, குளங்களை பட்டா போடாமல் இருக்கலாம்.
இன்னும் ஏராளமான மரக்கன்றுகளை நட்டு மழைப்பொழிவை அதிகப்படுத்தலாம்.

தமிழக அமைச்சரவையில் விரிவாக்ககமும், மாறுதலும் வரலாம் என்கிறார்கள். அதில் இரண்டு புதிய அமைச்சகம் உருவாக்க கலைஞருக்கு கோரிக்கை வைக்கிறேன்.

1. நீர்வள ஆதாரங்களை பாதுகாக்கவும், புதிய நீர் வள ஆதாரங்களை
உருவாக்கவும் விசேஷ அதிகாரங்களை கொண்ட ஒரு அமைச்சகம்.

2. வெளிநாட்டு வாழ் தமிழர் நலன் காக்கவும், வெளிநாட்டு வேலை
வாய்ப்புகளை முறைப்படுத்தவும் ஒரு அமைச்சகம்.

இவை இரண்டும் காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து கலைஞர்
ஆவன செய்ய வேண்டும்.
என்றென்றும் அன்புடன்,
பா,முரளி தரன்.

3 comments:

தெனாலி said...

தீர்வுகள் நல்லத்தான் இருக்கு! ஆனா இதையெல்லாம் செயல் படுத்த அரசின் முனைப்பு-Political Will-தான் தேவை! ஜே அரசு செஞ்ச மழை நீர் திட்டம் மாதிரி (அட்லீஸ்ட், ஒரு 30% பேராவது சரியா செஞ்சிருப்பாங்க இல்லயா?). அதை விட்டுட்டு காவிரி அரசியல் பண்ணக் கூடாது. யாருக்கும் இந்த பிரச்சனைய தீர்க்க அக்கறையில்லை - ஏனென்றால், அடுத்த வருஷம் அரசியல் பண்ண வேண்டுமில்லயா?


//இவை இரண்டும் காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து கலைஞர்
ஆவன செய்ய வேண்டும்.
என்றென்றும் அன்புடன்,
பா,முரளி தரன்//

தெனாலி said...

//இவை இரண்டும் காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து கலைஞர்
ஆவன செய்ய வேண்டும்.
என்றென்றும் அன்புடன்,
பா,முரளி தரன்// இந்த Cyan கலரை Use பண்ணாதீர்கள்!

Anonymous said...

இந்த Cyan கலரை Use பண்ணாதீர்கள்!
சுட்டி காட்டியதற்கு நன்றி.
எதிர் காலத்தில் தவிர்த்து விடுகிறேன்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.