நெய்வேலியில் பிராமணர்களின் பூணூல், குடுமி அறுக்கப் பட்டுள்ளது.
இதில் ஈடுபட்டவர்கள் தி.க வை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப் படுகிறது. தொடர்ந்து பிராமணர்களுக்கு எதிராக திட்டமிட்டு வன்முறையை கைக்கொள்ளும் தி.க வை
ஏன் தடை செய்யக் கூடாது? .
துரதிஷ்டவசமாக எந்த அரசியல் தலைவர்களும் இது போன்ற நிகழ்வுகளை கண்டித்து கடுமையான அறிக்கை வெளியிடுவதில்லை.
சாது ஜீவிகளான பிராமணர்களுக்கு பாதுகாப்பு அளிக்க அரசாங்கமும் முன்வருவதில்லை.
தாக்குதல் நடத்தப்பட்ட வேலுடையான்பட்டு கோவில், எனது வாழ்வின் ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளது. இந்த கோவிலைப் பற்றியும்,
இறைவனைப் பற்றியும், இந்த கோவில் சார்ந்த எனது அனுபவங்களையும், ஒரு தனி பதிவாக எழுதுவேன்.
நெய்வேலியில் தி.க வின் தொந்தரவு ரொம்பவும் அதிகம். இங்கு தி.கவினர், வாரியார் சுவாமிகளுக்கு செருப்பு மாலை போட்டு அவமதித்ததையும் எனது முந்தைய பதிவில் நான் குறிப்பிட்டுள்ளேன்.
நெய்வேலியில் ஒரு காலத்தில் எல்லாச் சுவர்களிலும் தி.க வினர் பிராமணர்களை தூற்றி, வன்முறை வசனங்களை எழுதி இருப்பார்கள்.
கோவிலுக்கு மிக அருகில் மைக் கட்டி, கூட்டம் போட்டு இறைவனை
கேலி பேசிக் கொண்டிருப்பார்கள். நான் சிறுவனாய் இருந்த பொழுது
இதை எல்லாம் கண்டு, கேட்டு மிகவும் மனம் வெதும்பியிருக்கிறேன்.
அரசியல் லாபங்களுக்காக ஒரு அமைதியான, ஒழுக்கமான சமூகத்தை,
பொய்ப் பிரச்சாரங்களின் மூலம், தமிழகத்தில் பொது எதிரி போல ஆக்கி
விட்டார்கள். ஒரு எழுத்தாளர் முன்பு வேதனைப்பட்டு எழுதியது இக்கனத்தில் ஞாபகம் வருகிறது.
தமிழகத்தில், பிராமணர்கள், யூதர்கள் போல நடத்தப் படுகிறார்கள்.
இது நூறு சதம் நிஜம் என்று இது போல சம்பவங்கள் ஊர்ஜிதப் படுத்துகின்றன.
பிராமண துவேஷிகள், பிராமண எதிர்ப்பு என்னும், நிகழ்காலத்திற்கு ஒவ்வாத, அர்த்தமில்லாத நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
தயவு செய்து தூக்கி எறியுங்கள் பிராமண எதிர்ப்பு என்னும் துருப் பிடித்த வாளை.
தமிழகத்தின் பிரச்சனைகளான ஏழ்மை, வேலை வாய்ப்பின்மை, தண்ணீர் பஞ்சம், பிரிவினைவாதம், தீவிரவாதம், இன வெறி, மொழி வெறி,அரசியல்
அதிகாரவர்கத்தின் பித்தலாட்டம், ஊழல், சட்டம் ஒழுங்குப் பிரச்சனை
போன்றவற்றிற்கும், பிராமணர்களுக்கும் துளியாவது சம்பந்தம் உண்டா?
மன சாட்சியை தொட்டு பதில் சொல்லுங்கள்.
எனது தனிப்பட்ட வாழ்வில் இதே போல் ஒரு தி.க வினரின் தாக்குதலை ஒரு பொதுக் கூட்ட நிகழ்ச்சியில் நான் எதிர் கொண்டுள்ளேன். ஆனால் அன்று தி.கவினர் எங்களிடம் வசமாக சிக்கிக் கொண்டனர். எனது அத்தனை ஆத்திரங்களையும் அன்று அவர்களை புரட்டி அடித்து தீர்த்துக் கொண்டேன்.
நல்லதுக்கு தமிழகத்தில் காலமில்லையோ என்று தோன்றுகிறது.
பிராமணர்களுக்கு இன்றைய, எதிர்கால தேவை; தங்களை தற்காத்துக்கொள்ள, பரசு ராமனின் ஆவேசத்தை முன் மாதிரியாகக்
கொண்ட ஒரு போர்ப்படையா?
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
தி.க. வினரின் பார்ப்பன வெறுப்பு அளவுக்கு மீறி போய்விட்டது. இதை அரசுதான் கட்டுப்படுத்த வேண்டும். இதை பார்ப்பனரல்லாதவர் வலியுறுத்த வேண்டும்.
இது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாபெரும் வன்முறையாக மாறும் வாய்ப்பிருக்கிறது. இப்போதே காலம் கடந்து விட்டது. ஆனால் இன்னும் முற்றவில்லை
Hi There,
I'm not a brahmin. I don't agree about their activities.
But i've also found a problem with you guys, mostly you guys are selfish. Don't care about others. Tell me from your heart, do you think have you done anything to Tamil people or commnunity.
ஐயரே பூநூல் அறுத்ததுக்கே தி.க வை தடை செய்ய சொல்றீரு. காஞ்சிவரத்துல தலையையே வெட்டினான் சங்கராச்சாரி. அப்ப நீ எங்க கோயில்ல மணி ஆட்டிக்கிட்டு இருந்தியா?
//தயவு செய்து தூக்கி எறியுங்கள் பிராமண எதிர்ப்பு என்னும் துருப் பிடித்த வாளை//
பூநூல நீ தூக்கி தூரபோடுறா முதல்ல.வந்துட்டான்
அனானி1 11ஒன்று,
"இப்போதே காலம் கடந்து விட்டது. ஆனால் இன்னும் முற்றவில்லை".
முற்றவில்லை என்றால் என்ன அர்த்தம்? நடந்த கொடுமைகள்
போதாதா?.
பிராமணர்கள் தக்க பதிலடி கொடுக்க தங்களை தயார் படுத்திக் கொள்ளவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.
மைக் அனானி,
ஆங்கிலத்தில் பதில்
இட்டிருப்பதால், உங்களுக்கு தமிழ் சரியாக தெரியாதோ என்று நினைத்தேன்.
உங்களுக்கு தமிழக வரலாறும், இந்திய வரலாறும், சம கால தமிழக நிகழ்வுகளும் தெரியாது என வெளிப்படுத்திக் கொண்டதற்கு நன்றி.
பிராமணர்களின் பங்களிப்பு அகத்தியன்,
தொல்காப்பியனிலிருந்து தொடங்குகிறது.
மிகச் சமீபத்தில் தி.வே. கோபாலையர்
பற்றி ஒரு கட்டுரை தற்போது திண்ணையில் கிடைக்கும். அதை படித்து தெளிவு பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
ஒரு சாதாரண கேள்வியை கேட்பதற்கு
கூட முகமூடி அணியும் பழக்கத்தை முதலில் விட்டு ஒழியுங்கள்.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.
"பூநூல நீ தூக்கி தூரபோடுறா முதல்ல.வந்துட்டான்"
அடேய் காஞ்சிடா பிலிம்ஸ்டா. பூணூலுடா, நீ குடிக்கிற கஞ்சில கல்லையும், மண்ணையும் வாரிப்போட்டுச்சு. போடா டேய் வருது
வாயில எனக்கு வண்டை வண்டையா.
பகுத்தறிவு மண்டையில ஏற ஏற, இதயத்துல ஈரம் குறைஞ்சு, மனசு வக்கிரமாய்டும் போல இருக்கு.
திருந்துடா...டா..டா...டா.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.
முரளி,
தமிழுக்கும் தமிழகத்துக்கும் பார்ப்பனர்கள் சிறந்த பங்களித்திருக்கிறார்கள். அதே சமயம் சமஸ்கிருத்தத்தையும், ஆங்கிலத்தையும் தமிழில் அதிகளவு கலந்து அதன் தனிச்சிறப்பை குலைத்ததிலும் பார்ப்பனர்களின் பங்கு அதிகம். அகத்தியன் மற்றும் தொல்காப்பியன் போன்றோர் பார்ப்பனர்கள் எனபதற்கு போதுமான ஆதாரம் கிடையாது. இந்த விவாதத்தை இத்தோடு நிறுத்திக் கொள்ளலாம். தி.க.விற்கு எதிரான ஆதரவைத்திரட்டுங்கள். அதையும் என்னைப்போன்ற பார்ப்பனர்கள் அல்லாதவர்களிடம் இருக்கும் ஆதரவை வெளியில் கொண்டு வர முயற்சி செய்யுங்கள்.
Post a Comment