THIS IS AN APPEAL ON BEHALF OF TAMILS WORKING IN FOREIGN SOIL.
சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வறிக்கையின் அடிப்படையில், தமிழகத்தில் இருந்து வெளிநாட்டு வேலைக்கு செல்வோர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அடுத்த ஆண்டு, இவ்வெண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழர்கள் முதலிடம் வகிப்பார்கள் எனவும் தெரிகிறது. வெளிநாட்டு வேலை என்றாலே ஏஜன்டுகள் தொல்லைதான். போலி ஏஜன்டுகளால் தமது வாழ்நாள் சேமிப்பையும், வாழ்க்கையையும் தொலைத்தவர்கள் ஏராளம்.
1.வெளிநாட்டு வேலைக்காக ஆள் எடுப்பதையும், அனுப்புவதையும், தமிழக அரசாங்கமே ஒரு அமைச்சகத்தை உருவாக்கி செம்மையாக நடத்தலாமே.
2. இதை கட்டண அடிப்படையில் கூடச் செய்யலாம்.
3.இந்த மாதிரி விஷயங்களை கண்கானிக்க அரசாங்கத்தில் ஒரு அதிகாரியோ/அமைப்போ உண்டா என்ற விவரங்கள் தெரியவில்லை. அப்படி யாரும் இருந்தால் அதைப்பற்றி ஒரு பெரிய விழிப்புணர்வு பிரச்சாரத்தை மக்களிடம் செய்ய வேண்டியது மிக அவசியமாய் உள்ளது.தமிழக அரசு ஆவன செய்யுமா?.
தாயகத்தில் இருந்து நாலாயிரம் கிலோமீட்டர்தொலைவில், நாதியத்துக் கிடக்கும்போது, தமிழன், இந்தியன் என்றெல்லாம் நினைத்து பெருமை கொள்ள முடியவில்லை.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
its a great idea. i agree wif u.
தமிழ் மட்டுமே உள்ள பாரங்கள்,பார்பனன், வன்னியன், மற்றும், கோட்டா, லோட்டா எல்லாமும் இருந்தால் பரவாயில்லையா?...சொல்லுங்க.....கருணாநிதி உடனடியாக ஒரு அமைச்சகத்தை ஆரம்பிக்க சொல்வோம்......
அன்பு தமிழன்,
நம்மை ஆளும் அரசியல்வாதிகள் நினைத்தால் ஒரு கையெழுத்தில் தீர்ந்துவிடும் பிரச்சனைதான்.
ஆனால் இதையெல்லாம் நினைத்து கவலைப்பட நமது அரசியல்வாதிகளுக்கு
அக்கறை இல்லை.
வெட்கம் கெட்ட ஜென்மங்கள்.தம்மை ஆளும் பொறுப்பை அளித்த மக்களுக்கு சொந்த மண்ணில் பிழைக்க வழி ஏற்படுத்திதர துப்பில்லை.அவர்கள் சுயமுயற்சியால் ஒரு வழிதேடிக்கொண்ட பின் அவர்களை பாதுகாக்கவும் வக்கில்லை.
பாரதி ஆற்றாமையில் புலம்பினானே;
பராசக்தி என்ன செய்ய நினைத்துள்ளாய் எம் தேசத்தை என்று.
அது போல் இறைவினடம் பாரத்தை போட்டுவிட்டு போக வேண்டியதுதான் என்று நினைத்தலும், என் தேசக்குடிமகன் ஒருவனையும் துன்பப்பட விடமாட்டேன் என சூளுரைக்கும் ஆண்மையும்,ஆற்றலும் மிக்க ஆட்சிக்காக மனம் ஏங்குகிறது.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.
Post a Comment